لا تصدر الفتن من العلماء، بل من عشاق الزعامة والقيادة وأنصاف المتعلمين الذين لا يرجعون للعلماء
பிரச்சனைகள் (ஃபித்னாக்கள்) உலமாக்களிடமிருந்து வருவதில்லை, மாறாக தலைமைத்துவம், (மற்றவர்களை) முன்நின்று வழிநடத்துதல் போன்றவற்றை மிகுதியாய் ஆசைப்படுபவரிடமிருந்தும், உலமாக்களிடம் திரும்பாத அரைகுறையாக படித்தவர்களிடமிருந்தே வருபவையாகும்.
العلماء ورثة الأنبياء، وورثة الأنبياء لا يثيرون الفتن، بل يفرقون بين الحق والباطل، وينصحون لله تعالى. وأتباع العلماء هم أسعد الناس باتباعهم للعلماء
உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள், நபிமார்களின் வாரிசுகள் குழப்பங்களை தூண்டுவதில்லை, மாறாக சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காண்பித்து உயர்ந்தோனாகிய அல்லாஹ்விற்காக உபதேசம் செய்வார்கள். (உலமாக்களை பின்பற்றுபவர்கள், அவர்கள் காட்டிய சத்திய பாதையை பின்பற்றுவதன் மூலமாக அவர்களே மக்களில் மிக மகிழ்ச்சியானவர்களாக இருப்பார்கள்.)
و[أكثر] من يطعن فيه أهل الضلال والبدع هو شيخنا الإمام ربيع المدخلي حفظه الله، يطعنون فيه بشتى التهم والأكاذيب، كقولهم: عميل وجاسوس ورموه بالنفاق واحتقروه وصغروا من شأنه وعلمه وجهوده. يصفونه بأنه يثير الفتن
அப்படிப்பட்ட உலமாக்களில் (இன்று) பித்அத்வாதிகளாலும் வழிகேர்டர்களாலும் அதிகமாக தாக்குதலுக்கு உள்ளாகப்பட்டவர்கள் யாரென்றால் அது நம்முடைய ஷய்க் அல்-இமாம் ரபீய் அல்-மத்கலிய் ( அல்லாஹ் அவர்களை பாதுகாப்பானாக ) அவர்களைப் பற்றி எண்ணற்ற அவதூறுகளையும், பொய்களையும் கொண்டு இவர்கள் தாக்கிப் பேசுகின்றனர். . எடுத்துக்காட்டாக : ஷய்க் அவர்களை ஒரு ஏஜென்ட், மற்றும் உளவாளி என்கின்றனர். நயவஞ்சகன் (முனாஃபிக்) என்று பொய்சுமத்துகின்றனர் , இன்னும் அதிகமாக ) உதாசீனப் படுத்துகின்றனர்.. அவர்களின் மதிப்பு மற்றும் கல்வித்திறன் மற்றும் அவர்களின் கடினமுயற்ச்சிகளை குறைத்து மதிப்பீடு செய்கின்றனர்.
يصفونه بأنه يثير الفتن
இன்னும் ஷய்க் அவர்கள் பிரச்சனைகளை (ஃபித்னாக்களை) ஏற்படுத்துவதாக வர்ணிக்கின்றனர் !!
ورب السماء إن الله تعالى حفظ الدين بهذا الإمام من كثير من الفتن، كفتنة الإخوان وأفراخهم وأضرابهم، والمدسوسين بين السلفيين وغيرها، وقام مقام الإمام أحمد رحمه الله يوم المحنة، فلله دره، وعلى الله أجره
வானத்தின் இரட்சகனின் மீது ஆணையாக, உயர்ந்தவனாகிய அல்லாஹ் இந்த இமாமைக் கொண்டு அதிகமான குழப்பங்களில் இருந்து இம்மார்க்கத்தை பாதுகாத்து விட்டான். வழிகெட்ட இக்வானிஸம்,அதனை தூக்கிப்பிடிப்பவர்கள், அதன் வகையராக்கள், மற்றும் சலஃபீ என்ற போர்வையில் ஊடுறுவியவர்கள் ஏற்ப்படுத்திய களயை அகற்றுதல் போன்ற பல குழப்பங்களில் இருந்து பாதுகாத்தான். இமாம் அஹ்மத் அவர்கள் யவ்முல் மிஹ்னாவில் (பெரும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட நாளில்) எவ்வாறு உறுதியுடன் சத்தியத்தை நிலை நிறுத்தினார்களோ அதேபோல் சத்தியத்தை நிலை நிறுத்தி (அவர்களுக்கு நிகரான அந்தஸ்தை அடைந்து) விட்டார்கள். . அல்லாஹ்வே அவர்களின் உழைப்பை அறிகிறான், அதற்கான நற்கூலியும் அவனிடமே உள்ளது.
ولا تظهر الفتن إلا من رجل يعشق الزعامة والقيادة أو من أنصاف المتعلمين الذين [لا يرجعون للعلماء] ويخوضون في فتن أكبر من مستواهم بمراحل
தலைமைத்துவம், (மற்றவர்களை) முன்நின்று வழிநடத்துதல் போன்றவற்றை மிகுதியாய் ஆசைப்படும் ஒருவர், அல்லது உலமாக்களிடம் திரும்பாத அரைகுறையாக படித்த ஒருவரிடம் இருந்தே தவிர பிரச்சனைகள் (ஃபித்னாக்கள்) தோன்றுவதில்லை. இவர்கள் தங்கள் தகுதியைவிட பல நிலைகளுக்கு அப்பால் பெரிதாக இருக்கும் பிரச்சனைகளில் (ஃபித்னாக்களில்) தங்களை நுழைத்துக் கொள்கின்றனர்.
وبعضهم نيته حسنة يريد أن يشارك في الإصلاح لكن بسبب ضعفه في العلم وضعفه في تقدير الأمور يفشل، فلهذا أقول لهم كما قال الله جل في علاه
மேலும் அவர்களில் சிலரின் நிய்யத் சரியான நிய்யத்தாக இருக்கும், தானும் சீர்திருத்தும் பணியில் பங்காற்ற வேண்டும் என்று எண்ணுவார், ஆனால் அவரின் கல்வியறிவின் பலவீனத்தினாலும், (மார்க்க) விஷயங்களை சரியாக நிர்ணயிப்பதில் உள்ள பலவீனத்தினாலும் தோல்வியைத் தழுவுகிறார். இதனால்தான் உயர்ந்தவனாகிய அல்லாஹ் கூறியதைப் போன்று அவர்களுக்கு நான் (உபதேசிக்கிறேன்) சொல்கிறேன்:
فَسْـَٔلُوٓا۟ أَهْلَ ٱلذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ
நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (உண்மையான இறை வேதத்தின்) ஞானமுடையவர்களைக் கேளுங்கள். சூரா அன்னஹ்ல் (16:43)
ولكن لا تحبون الناصحين
அனாலும் நீங்கள் உபதேசம் செய்பவர்களை விருப்புவதில்லை.
ஆக்கம்: அஷ்-ஷய்க் அரஃபாத் அல்-முஹம்மதி (அல்லாஹ் அவர்களைப் பாதுகாப்பானாக)
தமிழில்: அஸ்லம்.
Source: https://t.me/Arafatbinhassan/11858
நமது சமூக வலைதள பக்கங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்.
கேள்விகளுக்கு: Info@islamtamil.in
தொடர்ந்திருங்கள் நம்மோடு:
Response to “பிரச்சனைகள் (ஃபித்னாக்கள்) உலமாக்களிடமிருந்து வருவதில்லை”

Jazakallahu Khaira
May Allah bless your family and grant Jannah


Leave a Comment