ஏகத்துவமும் இணைவைப்பும்

உரை: முஹம்மத் அஸ்லம் அல்மதனி حفظه الله

எப்படி ஒரு மனிதன் இணைவைப்பிற்கு பயப்படாமல் இருக்க முடியும்?! ஏனெனில் அம்மனிதனை விட தவ்ஹீதில் உயர்ந்த நிலையை அடைந்தவராகவும் அல்லாஹ் அவர்களின் ஏகத்துவத்தை உண்மைப்படுத்தி சாட்சியம் கூறி மக்களுக்கு முன்னோடியாக இருந்து, தவ்ஹீதின் பக்கம் மக்களை அழைத்து அதனால் ஏற்பட்ட துன்பங்களை பொறுத்துக் கொண்டு அதை எதிர்ப்பவர்களை சண்டையிட்டு அதை வெறுப்பவர்களை களம் கண்டு சொந்த உற்றார் உறவினர்களாக இருந்தாலும் சரி அவர்கள் இணை வைத்ததற்காக அவர்களோடு தன்னை தூரமாக்கி கொண்டு இத்தனை விஷயத்தை செய்தவர்கள் தான் இப்ராஹிம் அலைஹி ஸலாம். அவர்கள் இந்த இணைவைப்பிற்கு பய்ந்தவர்களாக இருந்தார்கள். தனக்காகவும் தன்னுடைய சந்ததியனருக்காகவும் இந்த இணைவைப்பை பயந்துக்கொண்டார்கள். வணக்க வழிபாடுகளை தன்னுடைய ரட்சகனை அன்றி வேறு யாருக்கும் கொடுத்து விடக்கூடாது என்று பயந்தவர்களாக இருந்தார்கள் அதனால் அவர்கள் இந்த இணைவைப்பில் இருந்து தன்னையும் தன்னுடைய சந்ததிகளையும் பாதுகாக்கும் படி அவர்கள் அல்லஹ்விடம் கேட்டார்கள்

{ وَاجْنُبْنِي وَبَنِيَّ أَنْ نَعْبُدَ الْأَصْنَامَ رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِنَ النَّاس }

Scroll to Top